மாட்டு சாணம் தின்பவர்கள் இந்துக்கள்! சர்ச்சையைக் கிளப்பிய ZAMRI VINOTH!
.jpg)
- Thina S
- 13 May, 2025
மே 13,
இந்தியா பாக்கிஸ்தான் போரில் இந்தியாவுக்கு ஆதரவளிப்பவர்கள் மாட்டு சாணம் தின்பவர்கள் என சர்ச்சைக்குரிய மத போதகர் ZAMRI VINOTH தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இந்துக்கள் எந்த நாட்டிலெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பல்வேறு பிரச்சனைகளைக் கட்டவிழுத்து விடுவதாக ZAMRI VINOTH குற்றம் சாட்டியுள்ளார். மற்ற மதத்தினர்களுடன் இந்துக்கள் பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பி வருவதாகவும் Qatar, Bahrain, Kuwait, Oman, Saudi Arabia, Turkiye, Malaysia போன்ற இஸ்லாமிய நாட்டில் இந்துக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் ஆனால் இந்துக்கள் வாழும் இடங்களில் தொடர்ந்து அமைதியின்மையாக இருப்பதாகவும் ZAMRI VINOTH தெரிவித்தார்.
இந்துக்கள் கிறிஸ்த்துவர்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் பெளத்தர்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் இஸ்லாமியர்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் யூதர்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் சீக்கியர்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் பஹாய்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் ஷிண்டோக்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் நாத்திகர்களுடன் பிரச்சனை செய்கிறார்கள், இந்துக்கள் இந்துக்களுடன் வாழ்ந்தால் பெரும் பிரச்சனையைச் செய்கிறார்கள் என வெளிப்படையாக இந்துக்கள் மீது ZAMRI VINOTH வன்மத்தைக் கொட்டியுள்ளார்.
இந்துக்களை எந்த நாடெல்லாம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கிறதோ அந்த நாடுகளுக்கெல்லாம் எதிராகவே இந்துக்கள் செயல்படுவதாக ZAMRI VINOTH குற்றம்சாட்டியுள்ளார். இந்துக்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் புலம் பெயர்ந்ததாகவும் புலம்பெயர்ந்த நாட்டிலும் இந்துக்களால் பிரச்சனை என்றும் இந்துக்கள் என்றாலே பிரச்சனை எனும்படியானக் கருத்தை ZAMRI VINOTH வெளிப்படுத்தியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *