ZAMRI VINOTH ஜாமினில் விடுதலை!
- THINAGAREN SANGGAREN
- 17 Mar, 2026
மார்ச் 17,
சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த மார்ச் 13 ZAMRI VINOTH காவல்துறையின் கைதுக்குப் பயந்து தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றதாகத் தேசிய காவல்துறை தலைவர் DATUK SERI KHALID ISMAIL தெரிவித்திருந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கோலாலம்பூர் நீதிமன்றம் ZAMRI VINOTH-க்கு உத்தரவிட்டதை அடுத்து இன்று காலை 9.15 மணிக்குக் கோலாம்பூர் நீதிமன்றத்திற்கு ZAMRI VINOTH காவல் அதிகாரிகளின் கண்காணிப்புடன் கைவிலங்கிட்டபடி அழைத்து வரப்பட்டார்.
ZAMRI VINOTH உடன் சமூக ஆர்வலர் அருண் துரைசாமியும் நீதிமன்றத்திற்கு வந்த போது கைவிலங்கிடப்படாமல் இயல்பாக வந்ததையும் சமூகவலைத்தலவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அருண் துரைசாமியுடன் சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சின் துணை அமைச்சர் KULASEGARANஉடன் இருந்தது மேலும் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சமூகவலைத்தலங்களில் கருத்துகள் பரவி வருகிறது.
ZAMRI VINOTHக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதால் அவரை ஜாமினில் வெளியிடுவதைத் தவிர்க்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் Datuk Mohd Nordin Ismail நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். Datuk Mohd Nordin Ismailக்கு ஆதரவாக வாதாடிய மலேசிய இஸ்லாமிய வழக்கறிஞர் மன்றத்தின் செயலாளர் Muhammad Hariz Md Yusoff, குற்றம் சாட்டப்பட்ட ZAMRI VINOTHக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும் அவருக்கு 5 பிள்ளைகள் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் அவருடைய மனைவிக்குக் கோவிட் தொற்று இருப்பதால் தொடர் சிகிச்சையைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவும் ZAMRI VINOTHஅவருடைய குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதால் ஜாமினில் ZAMRI VINOTHஐ விடுவிக்கும்படி நீதிமன்றத்திற்குக் கோரிக்கை வைத்தார்.
மேலும், ZAMRI VINOTH தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்றும் மார்ச் 9 ஆம் திகதி ZAMRI VINOTH பெர்லிஸ் மாநில இஸ்லாமியத் துறையின் அனுமதியுடன் தாய்லாந்தில் உள்ள இஸ்லாமியர்களுக்குத் திருமணம் நடத்தி வைப்பதற்காகவே அவர் தாய்லாந்திற்குச் சென்றதாகவும் தாய்லாந்தில் வணிகம் தொடர்பாக ஒரு சிலரைச் சந்தித்து ZAMRI VINOTH மார்ச் 12 மலேசியா திரும்பியதாகவும் ZAMRI VINOTHஇன் வழக்கறிஞர் Muhammad Hariz Md Yusoff நீதிமன்றத்திற்கு வலியுறுத்தினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4,500 ரிங்கிட் ஜாமின் வழங்கியும் வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 29 நடைபெறும் என்பதால் அதுவரையில் மலேசியாவை விட்டு வெளியேற கூடாது என்றும் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த ZAMRI VINOTH ரமலான் மாதத்தில் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்பதால் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் இது குறித்து தாம் கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் செய்தியாளர்களின் மத்தியில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



