13 வயது மாணவி பள்ளியில் மரணம்! வலுக்கும் போராட்டம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 9, 

13 வயதான Zara Qairina Mahathir எனும் இடைநிலைப்பள்ளி மாணவி ஒருவர் பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாகப் பல்வேறு விசாரணைகள் முரணாக இருப்பதால் உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும் என சபாவின் மூன்று மாவட்டங்களில் அமைதி போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர். சபாவின் TAWAU, SANDAKAN, LAHAD DATU  மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைதி போராட்டத்தில் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து உயிரிழந்த Zara Qairina Mahathirக்கு அஞ்சலி செலுத்தியதுடன் துரிதமான விசாரணை வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 16 ஜூலை அதிகாலை 3 மணிக்குச் சபாவின் PAPAR மாவட்டத்தில் உள்ள Tun Datu Mustapha Limauan இடைநிலைப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து 13 வயதான Zara Qairina Mahathir கீழே விழுந்தார். அதிகாலை 4 மணிக்குத் தங்கும் விடுதியின் பாதுகாவலர் Zara Qairina Mahathir உடலைக் கால்வாயில் கண்டதாகவும் அதிகாலை 5 மணிக்குக் கோத்தா கினாபாலு Queen Elizabeth அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.16 மணிக்குக் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியதாகவும் இது விபத்தாக இருக்கலாம என காவல்துறையினர் தெரிவித்த நிலையில் 13 வயதான Zara Qairina Mahathir பகடிவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. 17 ஜூலை Zara Qairina Mahathir சுயநினைவை இழந்ததாக அவரின் மூளையில் எந்தவொரு செயல்பாடும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மூளைச்சாவு ஏற்பட்டதால் Zara Qairina Mahathir சிகிச்சை பலனின்றி 17 ஜூலை உயிரிழந்தார். மாணவர் தங்கும் விடுதியில் CCTV-கள் இல்லாததால் சம்பவம் தொடர்பான விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் காவல்துறையினர் பள்ளியின் நிர்வாகத்துடன் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *