Zayn Rayyan தாயாருக்கு 5 ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 31,

பெட்டாலிங் ஜெயாவில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது ஆட்டிசம் உள்ள சிறுவன் Zayn Rayyan வழக்கில் சம்மந்தப்பட்டதாக நம்பப்பட்டு வந்த அவரின் தாயார் Ismanira Abdul Manafக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து இன்று பெட்டாலிங் ஜெயா Sesyen நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2023 டிசம்பர் 5 பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Damansara Damai அடுக்குமாடிக் குடியிருப்பின் காட்டுப் பகுதியிலிருந்து சடலமாக Zayn Rayyan எனும் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். 

6 வயது சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் காயப்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதால் அவரின் தாயாரான 30 வயது Ismanira Abdul Manaf-ஐ கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் தனது மகனைக் கொலை செய்தது குறித்து வாக்குமூலங்கள் அளித்த Ismanira Abdul Manaf முன்னுக்குப் பின் முரணாகக் கருத்துகளைத் தெரிவித்ததால் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையிலும் Ismanira Abdul Manaf உறுதியானப் பதில்களை அளிக்காமல் முரணாகப் பதிலளித்து வந்ததால் 6 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கின் விசாரணையுடன் சிறுவனைப் பாதுகாக்க தவறியதற்கான குற்றத்திற்காக அவர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா Sesyen நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீடு குறித்தான எந்தவொரு மனுவையும் பெட்டாலிங் ஜெயா Sesyen நீதிமன்றம் ஏற்காது என நீதிபதி Dr Syahliza Warnoh உத்தரவிட்டதால் இன்று பிற்பகல் 1 மணிக்கு Ismanira Abdul Manaf காஜாங் சிறைக்குக் கொண்டு  வரப்பட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *