கட்சியின் கனவை நனவாக்க அஸ்மின் முக்கியம்! - அஸ்மினுக்கு ஆதரவாக ஒரு குரல்
- Shan Siva
- 30 Sep, 2025
கோலாலம்பூர், செப் 30: சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் கட்சியைத் தலைமை தாங்க தகுதியற்றவர் என்று உச்ச மன்ற உறுப்பினர் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு, அஸ்மின் அலியைத் தற்காத்து பெர்சத்து இணைப் பிரிவுத் தலைவர் கோ கெய்க் மெங் பேசியுள்ளார்.
அஸ்மினின்
தலைமையின் கீழ், பெரிகாத்தான்
நேஷனல் 22 இடங்களை வென்றதோடும்
கடந்த முறை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் பிடியிலிருந்து
சிலாங்கூரைக் கைப்பற்றும் நிலைக்குத் திரும்பியது என்று அவர் கூறினார்.
அப்துல் ரஷீத்
அசாரியிடமிருந்து பொறுப்பேற்றபோது, சிலாங்கூர் பெரிக்காத்தான்
தலைமையை அஸ்மின் மாற்றியமைத்ததாக கோ கூறினார்.
பெர்சாத்துவை
வழிநடத்தவும், சிலாங்கூரை
வழிநடத்தும் கட்சியின் கனவை நனவாக்க உதவவும் அவர் மிகவும் தகுதியான மற்றும்
திறமையான நபர் என்பது தெளிவாகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சிலாங்கூர் பெர்சாத்து
இணைப் பிரிவுத் தலைவரான கோ, அஸ்மின் மந்திரி
பெசாராக இருந்தபோது இலவச நீர் திட்டம் மற்றும் சில பகுதிகளில் மதிப்பீட்டு வரி
விலக்குகள் போன்ற முயற்சிகளை அறிமுகப்படுத்தியதால், சிலாங்கூர் மக்கள் அஸ்மினின் பங்களிப்புகளுக்கு
நன்றியுள்ளவர்களாக இருப்பதாகக் கூறினார்.
சிலாங்கூர்
மக்கள், அஸ்மினின் தலைமையை
தவறவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பெர்சாத்து
மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற சரியான பாதையில்
உள்ளன. இதற்கு அஸ்மின் தான் முக்கியம் தேவை என அவர் கூறினார்.
நேற்று, பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான், அஸ்மின் சர்ச்சை வீடியோ தொடர்பாகக் குறிப்பிட்டு, அஸ்மின் பெர்சாத்து தலைவராக இருக்கத் தகுதியற்றவர் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



