KL - Jalan Masjid India பாதுகாப்பான பகுதியே! - கோலாலம்பூர் மேயர் அறிவிப்பு!
- Shan Siva
- 06 Sep, 2024
கோலாலம்பூர், செப் 6: ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின்
முழுப் பகுதியும் பார்வையிட பாதுகாப்பானது என்றும், எந்த ஸ்டால்களோ அல்லது கட்டிடங்களோ செயல்படுவதை மூடுவதற்கு
உத்தரவிடப்படவில்லை என்றும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL உறுதியளித்துள்ளது.
விஸ்மா யாகினில் இருந்து போலீஸ் கூடாரம் வரை சுமார் 200 மீட்டர் பாதை மட்டுமே கட்டுமானப் பணிகளுக்காக
மூடப்பட்டிருக்கும் என்று கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ டாக்டர் மைமுனா முகமட்
ஷெரீப் தெரிவித்தார்.
நேற்று ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள வர்த்தகர்கள் சங்கத்தையும்
சந்தித்து, சுற்றியுள்ள
பகுதி பாதுகாப்பானது என்பதைத் தாங்கள் உறுதிப்படுத்தியதாக
அவர் கூறினார்.
மேலும் தடைகளால் சூழப்பட்ட பகுதி மட்டுமே மூடப்பட்டுள்ளது என்று அவர் அம்போய் திருவிழாவின் தொடக்க
விழாவில் கலந்துகொண்ட பிறகு பெர்னாமாவிடம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *