GISBH - CEO நசிருதீன் டத்தோ பட்டம் பறிமுதல்
- Shan Siva
- 18 Nov, 2024
மலாக்கா, நவம்பர் 18: GISB
Holdings Sdn Bhd (GISBH) நிறுவனத்தின் CEO நசிருதீன் அலிக்கு
வழங்கப்பட்ட Datuk பட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலாக்கா முதல்வர்
அப்துல் ரவூப் யூசோவின் ஆலோசனையின் பேரில் மலாக்கா மாநில ஆளுநர் இந்த முடிவை
எடுத்தார் என்று மாநில செயலாளர் அசார் அர்ஷாத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே,
2024 ஆம் ஆண்டு மாநில
விருதுகள் மற்றும் கவுரவங்களைப் பெறுபவர்களின் பட்டியலில் இருந்து நசிருதீனின்
பெயர் நீக்கப்பட்டுள்ளது.
நசிருதீனுக்கு
இனி அந்த பட்டத்தைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும், ஆயர் குரோ, கொம்ப்ளெக்ஸ் ஸ்ரீ
நெகிரியில் உள்ள மலாக்கா மாநிலச் செயலாளரின் அலுவலகத்தில் விருதைத் திருப்பித் தர
வேண்டும் என்றும் அசார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *