அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள் – மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு தகவல்

top-news
FREE WEBSITE AD

ஆமதாபாத், செப். 2 –

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத் விமான நிலையத்தில் இந்தியாவின் மூன்றாவது ‘மையம் மற்றும் கிளை வழித்தட’ செயல்பாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறினார்.

2014-ஆம் ஆண்டு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய விமான நிலையம் அல்லது புதிய முனையத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘உடான்’ திட்டத்தின் மூலம் சிறிய நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக மேலும் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பெருநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், இமயமலை பகுதிகள், தொலைதூரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அந்தமான் போன்ற தீவுப் பகுதிகளிலும் விமான நிலையங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக ராம்மோகன் நாயுடு கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *