உக்ரைனில் இந்தியருக்குச் சொந்தமான மருந்து குடோன் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: ஊழியர் பலி

top-news

கீவ், அக். 5 –

உக்ரைனில் இந்தியருக்குச் சொந்தமான மருந்துப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் - ரஷியா போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து தீவிரமாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் சுமி நகரில் அமைந்துள்ள மருந்துப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அங்கு பணிபுரிந்து வந்த 52 வயதுடைய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

தாக்குதலுக்கு உள்ளான மருந்துப் பொருட்கள் கிடங்கு இந்தியருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அவசர மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *