ஷா ஆலமில் கைகலப்பு: ஒருவர் கைது, மற்றொருவர் கார் மோதி உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 26-
நேற்று பிற்பகல் ஷா ஆலம், தமன் ஆலாம் மெகாவில் நடந்த கைகலப்பைத் தொடர்ந்து, மற்றொரு சந்தேக நபர் உயிரிழந்த நிலையில், போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பிற்பகல் 2 மணியளவில் ஜாலான் மண்டோலின் 33/5 என்ற இடத்தில் ஒரு குழுவினருக்கு இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், கைகலப்பின் போது பலர் வெட்டப்பட்டதாகவும் ஷா ஆலம் காவல் நிலையத் தலைவர் சாருடின் சமா தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவர் மீது நீல நிற பெரோடுவா அல்சா கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களின் நிலை குறித்துத் தெரியவில்லை.
இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



