பஹாமஸ் விமான விபத்தில் 10 பேர் பலி
- Surendran Sumdraraj
- 11 Jul, 2026
நசாவ், ஜூலை 11-
பஹாமஸில் நடந்த சிறிய ரக விமான விபத்தில், அதில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்தனர்.
Flamingo Air நிறுவனத்துக்குச் சொந்தமான Cessna 402 விமானம், பஹாமஸ் தலைநகர் Nassau-வில் உள்ள Lynden Pindling International Airport-இல் இருந்து San Andros நோக்கிப் புறப்பட்டிருந்தது.
ஆனால், North Andros பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. எனினும், பின்னர் அவர் காயங்களால் உயிரிழந்ததால், விமானத்தில் இருந்த அனைவரும் பலியானது உறுதிப்படுத்தப்பட்டது.
விபத்தில் 9 பயணிகள் மற்றும் ஒரு விமானி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்துக்கு பஹாமஸ் பிரதமர் Philip Brave Davis இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்ற நாளில் இந்த விபத்து நடந்ததால், அது பஹாமஸ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



