இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன் போதாது; 500 மில்லியன் ஒதுக்குங்கள்! MIPP புனிதன் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 17:

மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக 2025 பட்ஜெட்டில் RM 500 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமாக உள்ள இந்திய சமூகம், மற்ற சமூகங்களை விட அரசாங்கத்தின் ஆதரவை மிகவும் குறைவாகவே பெறுகிறது என்று அக்கட்சியின் தலைவர் பி புனிதன் தெரிவித்தார்.

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் ஒதுக்கப்பட்ட RM100 மில்லியன் போதுமானதாக இல்லை என்றும், RM500 மில்லியனுக்கும் குறைவான எதுவும் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வராது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மித்ரா ஒரு உருமாற்றப் பிரிவாக நிறுவப்பட்டது. ஆனால் RM100 மில்லியனுடன், அவர்களால் சமூக நல சேவைகளை மட்டுமே வழங்க முடிகிறது.
கடந்த ஆண்டு மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் சமூக-பொருளாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.  முக்கியமாக B40 குழுவிற்கு பயனளிக்கிறது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிதி 216 திட்டங்களை ஆதரித்தது, 134,247 பங்கேற்பாளர்களுக்கு உதவியது.
வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் மலேசிய இந்தியர் புளூபிரிண்ட் செயல்படுத்தப்படும் என்று தாம் நம்புவதாக புனிதன் தெரிவித்தார். மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் தலைமையில் இந்திய சமூகத்திற்கான அமைச்சரவைக் குழுவை அமைக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

நாளை சமர்பிக்கப்படவுள்ள வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒற்றுமை அரசாங்கம் வழங்கத் தவறினால், அது சமூகத்தின் நம்பிக்கையை மேலும் சிதைக்கும் என புனிதன் எச்சரித்தார்.
நிறைவேற்ற முடியாவிட்டால் வாக்குறுதிகளை அளிப்பதை நிறுத்துங்கள், என்று கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *