பத்து லாவுட் கடற்கரையில் 100 பேர் பாய்மர படகோட்ட போட்டியில் பங்கேற்பு!
- Muthu Kumar
- 11 Aug, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
தஞ்சோங் சிப்பாட், ஆக.11-
நேற்று காலையில் இங்கு பத்து லாவுட் கடற்கரையில் நடைபெற்ற பாய்மர படகோட்டப் போட்டியில் மாவட்ட ரீதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முன்னதாக, பாய்மர படகோட்டப் போட்டியின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதன் அடிப்படை விதிமுறைகளை விளக்கிய தஞ்சோங் சிப்பாட் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தத்தம் பாய்மர படகுகளுடன் கடலோரம் அணி வகுத்து நின்றிருந்த போட்டியாளர்கள் முன்னிலையில் கை அசைத்து போட்டியைத் தொடக்கி வைத்தார்.
நாட்டின் 68 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் இந்த பாய்மர படகோட்டப் போட்டி நடத்தப்படுவதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான போர்ஹான் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளாக இந்தப் பாய்மர படகோட்டப் போட்டி தொடர்ந்து நடை பெற்று வருவதாக அவர் கூறினார்.
பாய் மர படகோட்டிகள் கடலில் பாதுகாப்புடன் பயணிக்க முதல் உதவி உடைகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரு தினங்களில் இந்தப்போட்டி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் நியமிக்கப்பட்டிருந்த நடுவர்களின் இறுதி முடிவை ஏற்று வெற்றி பெற்றவர்களுக்கு பத்து லாவுட் கடற்கரை வளாகத்தில் நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் ரொக்கப் பரிசுகளுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவர் என்று போர்ஹான் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay
5554Vrss4W6' OR 969=(SELECT 969 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555v04JZ8Mn') OR 947=(SELECT 947 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555nXrgVlP4')) OR 482=(SELECT 482 FROM PG_SLEEP(15))--
aiPxvpay
555*DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(99)||CHR(99)||CHR(99),15)
aiPxvpay
555'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
aiPxvpay
555
aiPxvpay
555'"
aiPxvpay
@@u3hwy
aiPxvpay
(select 198766*667891)
aiPxvpay
(select 198766*667891 from DUAL)



