தேசிய தினம் & மலேசியா தினத்திற்கு 10 GB இலவச டேட்டா! அமைச்சர் அறிவிப்பு
- Shan Siva
- 12 Aug, 2026
புத்ராஜெயா, ஆக 12: தேசிய தினம் மற்றும் மலேசியா தின
கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் அரசாங்கம் மற்றும் ஐந்து தொலைத்தொடர்பு
நிறுவனங்களால் கூட்டாக தொடங்கப்பட்ட முயற்சியின் கீழ் மலேசியர்கள் 10 ஜிபி இலவச டேட்டாவைப் பெற உள்ளனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய தினத்தில் 5ஜிபியும், செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா தினத்தில் மீதமுள்ள 5ஜிபியும் வழங்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்
தெரிவித்தார்.
இந்த முயற்சியில்
அரசாங்கம் மற்றும் CelcomDigi, Maxis, TM, U Mobile மற்றும் YES ஆகியவற்றுக்கு
இடையேயான ஒத்துழைப்பை உள்ளடக்கியதாக ஃபஹ்மி கூறினார்.
ப்ரீபெய்டு
மற்றும் போஸ்ட்பெய்டு சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து மலேசிய குடிமக்களும் 10ஜிபி இலவச டேட்டாவைப் பெறுவார்கள் என்று அவர்
இன்று தனது அமைச்சகத்தில்தேசிய தினம்-மலேசியா தினம் 2026 ஸ்பான்சர்ஷிப் விழாவில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



