11,713 மாணவர்கள் Straight A SPM-மில் மாணவர்கள் சாதனை!

top-news
FREE WEBSITE AD


 2023 ஆம் ஆண்டு SPM தேர்வெழுதியவர்களில்  மொத்தம் 11,713 மாணவர்கள்  அனைத்து பாடங்களிலும் A+, A மற்றும் A- கிரேடுகளுடன் சிறந்த அடைவுநிலையைப்  பெற்றுள்ளனர் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

இன்று  முடிவுகளை அறிவித்த அவர், 2023 SPM வேட்பாளர்கள் முந்தைய ஆண்டை விட சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளனர், 4.74 என்ற நிலையில்  ஒப்பிடும்போது தேசிய சராசரி தரம் 4.60 ஐப் பதிவு செய்ந்துள்ளதாக அவர் கூறினார்.

2022 இல் 57.1% அல்லது 213,624 மாணவர்களுடன் ஒப்பிடும்போது, ​​2023 SPM இல் கலந்து கொண்ட 373,255 மாணவர்களில்  226,358 பேர் அவர்கள் எடுத்த அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2022 இல் தேர்வெழுதிய 342,742 மாணவர்களுடன் ஒப்பிடுகையில் 93.5% அல்லது 349,297 விண்ணப்பதாரர்கள் 2023 SPM சான்றிதழுக்கு தகுதி பெற்றுள்ளனர்" என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *