துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது: 30 மாகாணங்களில் அதிரடி சோதனை

top-news
FREE WEBSITE AD

துருக்கி, ஜூலை 20-

துருக்கி முழுவதும் ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கையில், 30 மாகாணங்களில் இருந்து 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலைத் துருக்கி உள்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அங்காரா, இஸ்தான்புல், அதானா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாகச் செயல்பட்டது, சமூக வலைத்தளங்கள் மூலம் பயங்கரவாத பிரசாரம் செய்தது மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் செயல்பட்ட அமைப்புகள் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, துருக்கி ஜென்டார்மரி பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகங்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது. சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *