பகாங்கில் 11 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின! - நால்வர் பலி
- Shan Siva
- 01 Sep, 2026
கோலாலம்பூர், செப் 1: பகாங், தெமர்லோ அருகே, குவாந்தான் செல்லும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 1-இன் கி.மீ 110.4-இல் நேற்று இரவு 11 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் இரண்டு புரோட்டான் சாகா, இரண்டு பெரோடுவா மைவி, ஒரு டொயோட்டா ஆல்ஃபார்ட், ஒரு விரைவுப் பேருந்து, ஒரு புரோட்டான் எஸ்70, ஒரு டேங்கர் லாரி, ஒரு ஹோண்டா சிஆர்வி, ஒரு டொயோட்டா ஹைலாக்ஸ் மற்றும் ஒரு பெரோடுவா அருஸ் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சலாவுதீன் ஈசா கூறினார்.
இரவு 10.44 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 11.24 மணிக்கு முதன்மை மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எஸ்70 வாகனத்தில் இருந்த ஆண் ஓட்டுநர், ஒரு பெண் பயணி மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும், சிஆர்வி வாகனத்தில் இருந்த ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சலாவுதீன் கூறினார்.
விபத்தில் காயமடைந்த நால்வரில், லாரி மற்றும் சிஆர்வி வாகனத்தில் சிக்கிக்கொண்ட இரண்டு ஆண்களும், ஹைலாக்ஸ் வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணும், புரோட்டான் சாகா ரக வாகனங்களில் ஒன்றில் இருந்த ஒரு ஆணும் அடங்குவர். பேருந்தில் இருந்த 30 பயணிகள் உட்பட, விபத்தில் சிக்கிய மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



