120க்கும் மேற்பட்ட பெர்சத்து உறுப்பினர்கள் பக்காத்தானுக்கு ஆதரவு
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
கோலாம்பூர், ஜூலை 9:
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, 120-க்கும் மேற்பட்ட பெர்சாத்து முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் பக்காத்தான் ஹரப்பானுக்குத் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளதாக பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் கெம்பாஸ் தொகுதியின் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளரான ஃபாயிசுதீன் புவாட் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆதரவளிக்கும் தங்கள் எண்ணத்தை முன்பே தெரிவித்திருந்ததாகவும், ஆனால் இன்றுதான் அதை பகிரங்கமாக அறிவிக்கத் தேர்ந்தெடுத்ததாகவும் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவும் கூட்டணியின் நடைமுறையே, அவர்கள் பக்காத்தான் ஹரப்பானில் இணைவதற்கான முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



