வெளிநாட்டு ஊழியர்கள் EPF-ல் பங்கேற்றால் ஆண்டுக்கு RM 12 பில்லியன் கிடைக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்:


நாட்டில் உள்ள 2.5 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்களை ஓய்வூதிய நிதியில் பங்களிக்கச் செய்தால், ஊழியர் வருங்கால வைப்பு நிதியான  (EPF) ஆண்டுக்கு RM12 பில்லியன் கூடுதலாகப் பெறும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.அடுத்த ஆண்டு பிப்ரவரியில், குறைந்தபட்ச ஊதியம் RM1,700 நடைமுறைப்படுத்தப்படுவதால், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவரிடமிருந்தும் 24 சதவிகித பங்களிப்பு வீதம் EPF க்கு மாதத்திற்கு RM1 பில்லியனை ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தொடக்கப் புள்ளியாக, ஊழியர்களுக்கு ஆறு சதவீதமும், முதலாளிகளுக்கு 8 சதவீதமும் பங்களிப்பு விகிதங்கள் இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பஷீர் அகமது ஷபீர் அஹ்மட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தற்போது,மலேசியர்களுக்கான பங்களிப்பு விகிதம் பணியாளர்களுக்கு 11 விழுக்காடு, முதலாளிகளுக்கு 13 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *