பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்!
- Shan Siva
- 06 Oct, 2026
கோலாலம்பூர், அக் 6: கெடா மாநிலம் கூலிமில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாக கூறப்படும் 13 வயது மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் இடைவேளையின் போது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளியின் ‘இ’
கட்டடத்தின் படிக்கட்டு அருகே மாணவர் கிடந்ததை கண்ட 48 வயது ஆசிரியர் போலீசில் புகார் அளித்ததாக
கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சியாம்சுல் சின்ரிங் தெரிவித்தார்.
சம்பவத்தின்போது
மாணவர் சுயநினைவுடன் இருந்ததுடன் பேசக்கூடிய நிலையிலும் இருந்துள்ளார். பின்னர்
அவர் சிகிச்சைக்காக கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போலீசாரின் ஆரம்பக்கட்ட
விசாரணையில், மாணவர் கல்வி தொடர்பான கடும்
மனஅழுத்தத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே பள்ளியில்
நான்காம் படிவத்தில் பயிலும் தனது மூத்த சகோதரியின் கல்விச் சாதனைகளுடன் தன்னை
அடிக்கடி ஒப்பிட்டுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வாரம்
தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பெற்றோரின்
எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போகுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்ததாகவும்
போலீசார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்திற்கு முந்தைய நாள் கல்வி
மற்றும் குடும்ப அழுத்தம் தொடர்பாக மாணவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்ததை
சில மாணவர்கள் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பதிவு பின்னர்
நீக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

