கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள 16 அடி நீளமான ஹென்றி முதலை!

top-news

ஹென்ரி என அழைக்கப்படும் சுமார் 16 அடி நீளம் கொண்ட இந்த ராட்சத முதலையை பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள்.. நைல் நதியில் இருந்து மீட்கப்பட்ட இந்த முதலை 1900ஆம் ஆண்டில் பிறந்தது.தற்போது இதன் வயது 124. தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிராக்வேர்ல்ட் கன்சர்வேட்டிவ் மையத்தில் இந்த முதலை பராமரிக்கப்பட்டு வருகிறது.

நைல் நதியோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை குறிவைத்து மூர்க்கத்தனமாக செயல்பட்டதால் இந்த முதலையை பிடித்து வந்து இந்த மையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். எனினும் தற்போது அது மூர்க்கத்தனமாக இல்லாமல் மிகவும் சாதுவாக நடந்து கொள்கிறது.

நைல் நதி முதலைகள் ஆப்பிரிக்காவின் 26 நாடுகளில் மிகவும் மூர்க்கத்தனமாக மனிதர்களை தாக்குவது தொடர்கதையான ஒரு நிகழ்வாகும்.ஹென்ரி உலகிலேயே வயதான முதலை என பெயரெடுத்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள காசியஸ் என்ற முதலையே உலகின் மிக பெரிய முதலை என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *