GE 16 - அது ஜாஹிட்டுக்கு சாதகமாக அமையலாம்! பக்காத்தான் அதை துரோகம் என்று சொல்லலாம்! - கைரி
- Shan Siva
- 14 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 14: 2022-ல் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து,
பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் துணை பிரதமர்
அஹ்மத் ஜாஹித் ஹமிடி ஆகியோருக்கு இடையேயான நம்பிக்கை மிகக் குறைந்த நிலையை
எட்டியுள்ளதாக அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
நெகிரி
செம்பிலான் தேர்தலுக்காக பெரிகாத்தான் நேஷனலுடன் கூட்டணி அமைக்கும் பாரிசான்
நேஷனலின் முடிவு, பாரிசான் மற்றும்
பக்காத்தான் ஹரப்பான் இடையே ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த
முன்னாள் சுகாதார அமைச்சர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான்
இதை ஒரு துரோகம் என்று சொல்லும். ஆனால், பாரிசாம் 'நாங்கள்
கூட்டாட்சி மட்டத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற மட்டுமே ஒப்புக்கொண்டோம்.
அதற்காக நாங்கள் உங்களுடன் என்றென்றும் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று அர்த்தமல்ல'
என்று சொல்லும். நீங்கள் எந்தக் கோணத்தில்
பார்த்தாலும், ஒரு மிகப்பெரிய
பிளவு ஏற்பட்டுள்ளது என்று கைரி
கூறினார்.
ஒற்றுமை
அரசாங்கத்திற்கு பாரிசான் எவ்வளவு காலம்
தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி என்றும், அடுத்த பொதுத் தேர்தலின் கால நிர்ணயம்
கூட்டணியைப் பெருமளவில் சார்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பாரிசானின் அனைத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் கூட, அரசாங்கம் தப்பிப்பிழைக்கும் என்று ந்தாம் உணர்வதாக
அவர் கூறினார். இருப்பினும் அது
மிகவும் நிலையற்றதாகவே இருக்கும்.
மேலும்,
PKR-இன் அதிருப்தி நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் பாரிசானில் சேர ஆர்வமுள்ள
சபாவைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களால், உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்துகொண்டே வருவதால், ஒருவேளை, நிலைமை உண்மையில்
ஜாஹிட்துக்குச் சாதகமாக இருக்கலாம்," என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



