இவ்வாண்டு 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!
- Shan Siva
- 07 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 7: இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அக்டோபர் 14 வரை 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒஸ்மான், எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும்,
866 பேரின் மரண தண்டனை
சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அந்த எண்ணிக்கையில் 52 பேரின் தண்டனைகள் மேல்முறையீட்டு கட்டத்தில்
குறைக்கப்பட்டன.
இந்த ஆண்டு மரண
தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதே காலகட்டத்தில் குறைக்கப்பட்ட
தண்டனைகளின் எண்ணிக்கை குறித்து PH- புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கேட்ட கேள்விக்கு
அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தண்டனை
குறைக்கப்பட்ட மற்ற 814 பேரும்
செப்டம்பர் 12 முதல் அமலுக்கு
வந்த மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைச் சட்டத்தின் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்ததாக
அஸாலினா கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *