தமிழ் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள்! – ஃபாமி உறுதி!

top-news

தமிழ் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள்! – ஃபாமி உறுதி!

தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமிபாட்ஸில் இன்று  தமிழ் ஊடகவியலாளர்களுடன் உடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.’தகவல் தொடர்பு அமைச்சருடன் ஒரு காலைப் பொழுது’ எனும் தலைப்பில் தலைநகரில் தேநீர் உபசரிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் ஊடகவியாலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஊடகங்களின் நிலை குறித்தும், செய்தியின் தன்மை குறித்தும் விளக்கிய அவர், ஊடகவியலாளர்களுக்கு அதிகமான திட்டங்களை முன்னெடுப்போம் என்று கூறினார். குறிப்பாக மலேசியத் தமிழ் ஊடகங்களுக்கு அரசு சிறப்பான பங்களிப்பை செய்யும் எனத் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கான பிரத்தியேக பயிற்சி, மீடியா அட்டை இல்லாத ஊடகவியலாளர்களுக்கு விரைந்து அதனைப் பெற்றுக்கொள்ளும்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.  மேலும் அரசு சார்பிலான விளம்பரங்கள் தமிழ் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை அளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *