ஓம்ஸ் அறவாராயத்தின் 19 ஆவது தங்கப் பதக்க விழா

top-news

கோலாலம்பூர், நவ. 22-

ஓம்ஸ் அறவாராயத்தின்  2026ஆம் ஆண்டுக்கான 19 ஆவது தங்கப் பதக்க விழா மலாயாப் பல்கலைக்கழகத்தின் faculty of art and social sciences, lecture hall F-ல்  நாளை நவம்பர் 23, திங்கள் கிழமை மாலை 6 மணி தொடங்கி  நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில்  பல்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்திய ஆய்வியல் துறை மாணவர்கள் என மொத்தம் 38 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.  இதில், இந்திய ஆய்வியல் துறையைச் சேர்ந்த 27 மாணவர்கள் தங்கப் பதக்கங்களைப் பெறுகின்றனர். அவர்களில் இளங்கலைப் பட்டப்படிப்பில் (BA) 16 பேரும், முதுகலைப் பட்டப்படிப்பில் (MA) 4 பேரும், முனைவர் பட்டப்படிப்பில் (PhD) 7 பேரும் தங்கப்பதக்கம் பெறுகின்றனர்.
மேலும், வேறு துறைகளைச் சேர்ந்த  மானிடவியல் மற்றும் சமூகவியல், புவியியல், ஆங்கில இலக்கியம், சுற்றுச்சூழல் ஆய்வியல், அனைத்துலக மற்றும் மூலோபாய ஆய்வியல், தென்கிழக்காசிய ஆய்வியல், கிழக்காசிய ஆய்வியல், இந்திய ஆய்வியல், சீன ஆய்வியல், சமூக நிர்வாகம், வரலாறு மற்றும் ஊடக ஆய்வியல் ஆகிய 12 இளங்கலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும்  தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
இதில் ஒரே ஒரு மாணவர் இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் பெறுவதால் மொத்தம் 39 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
பல்வேறு துறைகளில் கல்விச் சிறப்பை வெளிப்படுத்திய மாணவர்களின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் இந்தத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 18 ஆண்டுகளாக ஓம்ஸ் அறவாரியம்  மலாயாப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த தங்கப்பதக்கங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்