1MDB -யால் அரசுக்கு RM 20.1 பில்லியன் நிதிச்சுமை!

top-news

கோலாலம்பூர், அக் 23: இதுவரை மீட்கப்பட்ட நிதி மற்றும் சொத்துகளைக் கழித்த பின்னரும்,1MDB -யால் அரசுக்கு RM 20.1 பில்லியன் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

1MDB தொடர்பான அரசின் மொத்த நிதிப் பொறுப்புகள் 51.4 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளன. இதில், 31.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதி மற்றும் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், மீட்கப்பட வேண்டிய நிகர நிதிச்சுமை 20.1 பில்லியன் ரிங்கிட்டாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், 1MDB கடன் பொறுப்புகள் மற்றும் நிதிக் கடப்பாடுகளுக்காக அரசு இதுவரை 42.5 பில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தியுள்ளது. இதில் 27.7 பில்லியன் ரிங்கிட் அசல் தொகையாகவும், 14.8 பில்லியன் ரிங்கிட் வட்டி மற்றும் இதர செலவுகளாகவும் செலுத்தப்பட்டுள்ளன.

1MDB விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படும் குற்றவியல் தண்டனை அல்லது மன்னிப்பு நடவடிக்கைகள், முறைகேடாகப் பெறப்பட்ட நிதியை மீட்பதற்கான சிவில் வழக்குகளைத் தானாகவே முடிவுக்குக் கொண்டுவராது என்றும் நிதி அமைச்சு விளக்கமளித்தது! 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *