நடைபாதை வியாபாரிகளுக்காக RM 200 மில்லியன்!

top-news

கோலாலம்பூர், ஜூன் 19: 'லெஸ்டாரி நியாகா @ கோலாலம்பூர் 2026' திட்டத்தின் கீழ், தலைநகரம் முழுவதும் உள்ள 287 நடைபாதை வியாபார இடங்களை மேம்படுத்துவதற்காக கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) 200 மில்லியன் ரிங்கிட்டை செலவிடும். இதனால் 11,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பயனடைவார்கள் என்று தெர்விக்கப்பட்டுள்ளது.

நடைபாதை வியாபாரிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட சூழல்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று  கூட்டரசுப் பிரதேச  அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

இந்த ஆண்டு, DBKL பல இடங்களில் 'லெஸ்தாரி நியாகா' திட்டத்தை செயல்படுத்தும் என்றும், சிறு வியாபாரிகளை நிர்வகிக்கும்போது, குடியிருப்பாளர்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நடத்துநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கண்ணோட்டங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *