ஊடகவியலாளர் வளர்ச்சிக்காக 20 லட்சம் வெள்ளி! - அன்வார் அறிவிப்பு
- Shan Siva
- 27 May, 2024
ஊடகவியலாளர் வளர்ச்சிக்காக 20 லட்சம்
வெள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். தேசிய ஊடகவியலாளர்
மாநாட்டின் மேம்பாட்டிற்காக 10 லட்சம் வெள்ளியும், ஊடகத்
துறையில் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு தொடர்பாக கூடுதலாக 10 லட்சம் வெள்ளி நிதியையும் அன்வார் இன்று ஊடகவியலாளர் தின நிறைவு விழாவில் அறிவித்தார்.
ஊடகங்கள்
நாட்டின் நிலை தன்மைக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது என்பதை
வலியுறுத்திய அவர், மலேசியர்களிடையே சகோதரத்துவம் தலைத்தோங்க அனைவரும் பாடுபட
வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்களைக்
கட்டுப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லையென்றாலும், மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சில
தரப்பினர் தவிர்க்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், சமூகக் கடப்பாட்டுடன்
ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்றும், தனிநபரின் தூண்டுதலின்
பேரில் இயங்கினால் மக்களுக்கு முறையான செய்திகளை வழங்க முடியாது என்பதையும் நினைவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *