DAP க்குச் சீனர்களின் பரிதாப வாக்கு மட்டுமே கிடைக்கும் - MCA தலைவர் WEE KAH SIONG சாடல்
- Thina S
- 08 May, 2024
கடந்த காலங்களில் ம.சீ.ச வை குறை கூறிய பிழைப்பு நடத்திய கட்சி தான் டி.ஏ.பி என ம.சீ.ச தலைவர் WEE KAH SIONG சாடினார். ம.சீ.ச வைக் குறை சொல்லாமல் அவர்கள் அரசியல் செய்ததே இல்லை. அதே இப்பவும் தொடர்கிறது என்றார் அவர்.
ம.சீ.சா வைக் குண்டர் கும்பல் கட்சி என DAP பொதுச் செயலாளர் ANTHONY LOKE தெரிவித்திருப்பதைத் தானும் தம் கட்சியினரும் மன்னிக்கமாட்டோம் என்பதை வலுவாகப் பதிவு செய்யவே KUALA KUBU BARU இடைத்தேர்தில் நாங்கள் பங்கேற்வில்லை என ம.சீ.ச தலைவர் WEE KAH SIONG தெளிவுப்படுத்தினார்.
மாமன்னரின் உத்தரவுக்கும் பாரிசான் உடனான பங்காளித்துவத்திற்கும் மரியாதை அளித்து தான் இன்னும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருக்கிறோம், இதே தான் அரசியல் நேர்மை. அரசியலில் நாம் வழங்கும் வாக்குறுதிகளும் நம்பிக்கைகளும் கூட்டணியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.
ஆனால், DAP க்கு இதெல்லாம் தெரியாது. பல்லின மக்களின் சமத்துவத்தைப் போற்றாத பாஸ் கட்சியுடன் கடந்த காலங்களில் கூட்டணியில் இருந்தவர்கள் இவர்கள். இப்போது பாஸ் கட்சியை மதவாதக் கட்சி என வசைப்பாடுகிறார்கள்.
பாஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் தெளிவாகத் தனது சித்தாந்தங்களை வரையறுத்துள்ளது. இசுலாமியர்களின் நலன் காப்பதே பாஸ் கட்சியின் முதன்மை நோக்கம்.
பல்லினக் கட்சியான DAP கட்சி, PAS உடன் கூட்டணியில் இருப்பதன் நோக்கம்? இது தான் மலிவான அரசியல் என ம.சீ.ச தலைவர் WEE KAH SIONG கடுமையாகச் சாடியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *