சுங்கை கோபாட் ஆற்றில் விழுந்த 26 வயது இளைஞர் மாயம்

top-news

குவந்தான், ஜூன் 16: குவந்தான், ஜாலான் சுங்கை லெம்பிங் அருகே, படகில் இருந்து மீன்பிடி வலை வீசிக் கொண்டிருந்தபோது Sungai Kobat  ஆற்றில் விழுந்த 26 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்த்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10.23 மணிக்கு இந்திரா மக்கோத்தா  தீயணைப்பு நிலையத்திற்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜுல்ஃபட்லி ஜகாரியா கூறினார்.

பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பரும் படகில் இருந்து வலை வீசிக் கொண்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர் எதிர்பாராதவிதமாக நீரில் விழுந்து காணாமல் போனதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரைத் தேடும் மற்றும் மீட்கும் பணி மீனவர்களின் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துறையின் நீர் மீட்புக் குழுவைச் சேர்ந்த மூழ்காளர்கள் ஆற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்  என்று ஜுல்ஃபட்லி கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *