ரவாங் காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவனின் 2 நண்பர்கள் தொடர்ந்து தீவிரமாகத் தேடப்படுகின்றனர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்.30-

ரவாங், கம்போங் பாரு குண்டாங்கில் கடந்த 25ஆம் தேதி போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆடவனின் 2 நண்பர்கள் தொடர்ந்து தீவிரமாகத் தேடப்படுகின்றனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவிலுள்ள கடையில் அத்துமீறி நுழைந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இவ்விருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக ரவாங், கம்போங் பாரு குண்டாங்கில் போலீஸ், பொதுமக்களின் கார்களை மோதியதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 26 குற்றப் பதிவுகளைக் கொண்ட ஆடவன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். டாமன்சாராவிலுள்ள ஒரு கடையினுள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவன் இதற்கு முன்பு குற்றத் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளான்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *