துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் 2 ராணுவ வீரர்கள் பலி!
- Shan Siva
- 16 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 16: Gurun, Kem Hobart துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தில் இன்று நடைபெற்ற பயிற்சியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆண் மற்றும் பெண் ராணுவ வீரர்கள், சுங்கை பெட்டாணியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தை கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ராம்லான் உறுதிப்படுத்தினார். இன்று மதியம் 12.30 மணிக்கு இதுகுறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்ததாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

