கட்டாயப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்பு! மூவர் கைது! – IMIGRESEN

top-news

நவம்பர் 20,

கோலாலம்பூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட Bangladesh நாட்டச் சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். தங்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக இரு பெண்கள் குடிநுழைவுத் துறைக்குத் தொடர்புக் கொண்டு புகார் அளித்ததன் அடிப்படையில் நேற்று நண்பகல் 2.38 மணியளவில் சம்மந்தப்பட்ட பகுதியைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதாகவும் 30 வயது 24 வயது Bangladesh நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் மீட்கப்பட்டதாகவும் Bangladesh ஆடவர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

30 வயது 39 வயது 50 வயது என Bangladesh நாட்டைச் சேர்ந்த ஆடவர்கள் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி மலேசியாவுக்கு அழைத்து வந்து கடந்த 1 மாதக் காலமாகப் பாலியல் தொழிலில் தங்களை ஈடுபடுத்தியதாக மீட்கப்பட்ட இரு பெண்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Jabatan Imigresen Malaysia (JIM) menyelamatkan dua wanita Bangladesh dipercayai mangsa eksploitasi seks dalam serbuan di Kuala Lumpur. Operasi turut menahan 3 lelaki warga Bangladesh, termasuk dalang sindiket.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *