ரசாயனத் தொழில்சாலை ஊழியர்கள் மூவருக்குத் தீ காயங்கள்!
- Sangeetha K Loganathan
- 10 Oct, 2024
johor gelang patah வில் உள்ள ரசாயனத் தொழில்சாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வெளிநாட்டு தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளதாக iskandar puteri மாவட்டக் காவல் ஆணையர் Kumarasan Muniandy ஓர் அறிக்கையின் வயிலாகத் தெரிவித்தார். இன்று காலை 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்திற்கானக் காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும் தீயில் பாதிக்கப்பட்ட 29 முதல் 40 வயதுக்குற்பட்ட மூவருக்கும் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 8 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் இரவு 8 மணிக்குத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தொழிலாளர்கள் தீயினால் பாதிக்கப்பட்ட காணொலிகளையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என காவல் துறையினர்கள் கேட்டுக் கொண்டனர்.
Tiga pekerja asing cedera dalam kebakaran kilang kimia di Gelang Patah, Johor. Kebakaran dikawal selepas 8 jam. Polis meminta orang ramai tidak berkongsi video dan gambar kejadian di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *