30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிப்பு; ஆம் ஆத்மி கட்சி புகார்!

top-news

புதுடெல்லி: டெல்லியில் தசரா விழாவின்போது 30 அடி உயரமுள்ள கரப்பான்பூச்சி உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

டெல்லியின் பிடாம்புரா பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியில், ஸ்ரீ கேசவ் ராம்லீலா குழு சார்பில் தசரா விழா நடைபெற்றது. இதில் வழக்கமாக எரிக்கப்படும் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளுடன், பிரமாண்டமான கரப்பான்பூச்சி உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ், டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் செயலால் இந்து மதத்தினரின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரம்பரிய மத வழக்கங்கள் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குழுவின் தலைவர் அசோக் கோயல் தேவராஹா மற்றும் டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *