வீட்டின் முன் சத்தமாக இருந்ததால் 30 வயது ஆடவர் படுகொலை!
- Sangeetha K Loganathan
- 02 Nov, 2024
நவம்பர் 2,
ஜொகூரில் உள்ள TAMAN SEJATI பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 30 வயது ஆடவர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 6 பேர் கொண்ட கும்பல் 30 வயது ஆடவரைத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் AHMAD ZAMRY MARINSAH விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தீபாவளி இரவில் தனது வீட்டின் முன் சத்தமாக மோட்டார் சைக்கிளில் ஒலி எழுப்பியதால் அக்கும்பலைத் திட்டியதாகவும் இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டிலிருந்த ஆடவர் மோட்டார் சைக்கிளில் இருந்த 30 வயது ஆடவரைப் பாராங் கத்தியால வெட்டிக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைக்கு ஒரு பெண் உட்பட அறுவரைக் காவல்துறையினர்கள் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் செகாமாட் மாவட்டக் காவல் ஆணையர் AHMAD ZAMRY MARINSAH தெரிவித்தார்
Enam individu ditahan akibat pergaduhan hingga menyebabkan kematian lelaki 30 tahun di Segamat, berpunca dari perselisihan. Mangsa diserang dengan parang, dan rakan-rakan turut cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *