என்.எல்.சியில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் – அன்புமணி கடும் கண்டனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 2 –

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில வாரங்களில் 713 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெய்வேலியில் உள்ள 1, 1ஏ மற்றும் 2-ஆம் நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதால் 347 பேர் வேலை இழந்ததாகவும் கூறினார்.

மேலும், செப்டம்பர் 3-ஆம் தேதி மேலும் 64 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும், நவம்பர் 16-ஆம் தேதிக்குள் மொத்தம் 1,060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *