சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்காக வாதாட ப.சிதம்பரம் உள்பட 35 மூத்த வக்கீல்கள் நியமனம்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 17-

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் சார்பில் ஆஜராகி வாதாடுவதற்காக மூத்த வக்கீல் ப.சிதம்பரம் உள்பட 35 பேரை நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பட்டியலைத் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்காக ஆஜராகும் வக்கீல்களை நியமிப்பது தொடர்பாக அட்வகேட் ஜெனரலுடன் அரசு ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் பிரபலமாக வாதாடி வரும் மூத்த வக்கீல்கள், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல்களாக செயல்படுபவர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வக்கீல்கள் என மொத்தம் 35 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்தப் பட்டியலுக்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *