விளையாட்டில் பலியான 3 அரசு அதிகாரிகள்!

top-news

நவம்பர் 16,

நேற்று மாலை வெளிப்புற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித் துறை (JKR) ஊழியர்கள், கம்பாரில் உள்ள Sungai Jahang பகுதியில் பயிற்சி நடவடிக்கையின் போது ஆற்றில் விழுந்ததில், 3 பொதுப்பணித் துறை ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  நேற்று மாலை இது தொடர்பானப் புகைப்படங்கள் ஊகங்களுடன் வெளிவந்த நிலையில் கம்பார் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Nazri Daud இரவு 10 மணிக்குச் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

பொதுப்பணித் துறையின் பயிற்சியின் போது 21 பேர் கொண்ட குழு ஆற்றில் water rafting நடவடிக்கை மேற்கொண்டதில் 7 பேர் சென்ற படகு  கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் அதில் நால்வர் மீட்கப்பட்ட போதும் 47 வயது Suhaili Mat Saad, 37 வயது Mohamad Khairul Hakim Hamidi, 29 வயது Muhammad Ikram Abdul Bari என 2 ஆண்கள் ஒரு பெண் அதிகாரி  நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அவர் விளக்கமளித்தார். இரவு 9 மணியளவில் கம்பார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மூவரின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

3 peserta program 'team building' JKR maut selepas bot terbalik akibat kepala air di Sungai Jahang. Mangsa dikenal pasti, manakala kes diklasifikasikan sebagai mati mengejut. Polis menasihatkan peka terhadap cuaca semasa aktiviti air

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *