சுபாங் விமான நிலையத்தில் புறப்பட முயன்ற ஹெலிகாப்டரில் தீ: நான்கு பேர் உயிர் தப்பினர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 15 —

சுபாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் இயந்திரச் சோதனைக்காக புறப்பட முயன்ற ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்ததில், அதில் இருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இன்று நண்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம், விமானங்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) வசதி ஒன்றில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கமோவ் கா-32 (Kamov Ka-32) ரக ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இயந்திரத்தைச் சோதனை செய்வதற்காக ஹெலிகாப்டர் புறப்படத் தயாராகியிருந்தபோது தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *