ஜாஹிட் வாகனத்தை பின் தொடர்ந்த நபருக்கு RM 4000 அபராதம்
- Shan Siva
- 08 Oct, 2026
கோலாலம்பூர், அக் 8: துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியின் வாகன
அணிவகுப்பைப் பின்தொடர்ந்து மிக நெருக்கமாகச் செல்ல வேண்டாம் என்று காவல்துறை
அதிகாரி ஒருவர் பிறப்பித்த உத்தரவை மீறியதற்காக, 27 வயதுடைய ஒருவருக்கு இன்று 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கோலாலம்பூர்
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 1967-ஆம் ஆண்டு காவல்
சட்டத்தின் பிரிவு 21(1)-ன் கீழ்
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரையன் மார்க் டேனியல் என்ற அந்த நபர்
ஒப்புக்கொண்டதாக கோலாலம்பூர் போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் ஜம்சுரி ஈசா
தெரிவித்தார்.
அபராதத் தொகையைச்
செலுத்தத் தவறினால், எட்டு மாதங்கள்
சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்தச் சொத்து முகவருக்கு
உத்தரவிட்டது.
ஹோண்டா சிஆர்-வி
(Honda CR-V) காரை ஓட்டிச்
சென்ற அந்த நபர், நேற்று கைது
செய்யப்பட்டார். ஜாஹிட்டின் வாகன அணிவகுப்பு காஜாங்கிலிருந்து சுபாங் ஜெயாவில்
உள்ள சன்வே மருத்துவ மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஷா ஆலம் விரைவுச்சாலையின் 48.5-வது கிலோமீட்டர் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
வாகன
அணிவகுப்பைப் பின்தொடர்ந்து மிக நெருக்கமாகச் செல்ல வேண்டாம் என்று காவல்துறை
மோட்டார் சைக்கிள் ரோந்து அதிகாரி விடுத்த எச்சரிக்கையை அந்த நபர் புறக்கணித்ததாக
ஜம்சுரி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

