SPM 2026 தேர்வில் 420, 879 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்! - கல்வி அமைச்சு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா: 2026ஆம் ஆண்டுக்கான   SPM தேர்வில் நாடு முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 879 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தத் தேர்வு அக்டோபர் 26 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 3,334 தேர்வு மையங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மலாய் மொழிக்கான வாய்மொழித் தேர்வு நவம்பர் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். ஆங்கில மொழி வாய்மொழித் தேர்வு நவம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும்.

அதேவேளை, அறிவியல் செய்முறைத் தேர்வு நவம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும்.

மலாய் மொழி மற்றும் ஆங்கில மொழிக்கான செவிமடுத்தல் தேர்வுகள் முறையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும்.

எழுத்துத் தேர்வுகள் நவம்பர் 23 முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

SPM 2026-க்கான முழுமையான தேர்வு அட்டவணையை மலேசியத் தேர்வுகள் கவுன்சில் விரைவில் வெளியிடும் என்றும் அமைச்சு கூறியுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *