குளுவாங் பத்து பகாட் - மெர்சிங் பாதையின் சீரமைப்புபணிகளுக்காக 4.5 லட்சம் ரிங்கிட்!

top-news
FREE WEBSITE AD

குளுவாங், செப். 28

போக்குவரத்து துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் குளுவாங் மாவட்டத்தில் உள்ள எஃப்டி 50 பத்து பகாட் - மெர்சிங் பாதையின் 52.9-55.0 பகுதியில் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ததில் பராமரிப்பு பணிகள் தேவைப்படுவதை உறுதி செய்தார்.

அமைச்சு,சீரமைப்புபணிகளுக்காக 4.5 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதியை கடந்த
செப்டம்பர் 4 ஆம் தேதி ஒதுக்கியது. பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 5 அன்று தொடங்கப்பட்டு இவ்வருடம் நவம்பருக்குள் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்தியாளர் அறிக்கையில் அவர் வெளியிட்டார்.

தற்போதுள்ள பணிகளில் எஃப்டி 50 சாலையின் மேற்பரப்பை மேம்படுத்துதல் அடங்கியுள்ளது: இது நான்கு வரிசைகள் கொண்ட இருவழி சாலை ஆகும். இதில் 'மில்' மற்றும் 'பேவ்', மறுபடியும் கட்டுதல் மற்றும் சாலையின் குறிச்சொற்களை உருவாக்குதல் ஆகியவை அடங்குகிறது என்று அவர் கூறினார்.

போக்குவரத்து அமைச்சு கண்காணிப்பு குழு மற்றும் பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள். அங்கீகாரம் பெற்ற தொகைக்கு உட்பட்டு சீரான மற்றும் காலதாமதத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட பணிகளை திறம்பட செயல்படுவதாக நம்புகிறோம். இது அந்த சாலையில் பயணிக்கும் 175,000 பயணிகளுக்கான பயன் பாடு என்றார்.

இந்த சாலை பராமரிப்பு பணிகளுக்கான தொடர்ச்சியான கவனம், மலேசியா மடனி ஒருங்கிணைந்த அரசு கட்டமைப்பின் ஓர் உறுதிமொழியாகும், மை ஜாலான போக்குவரத்து அமைச்சு திட்டத்தின் அடிப்படையில் உயர்தர பாதைகளின் கட்டமைப்புக்கான நோக்கமென தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *