பத்தாண்டுகளில் மலேசியாவில் 49,992 ஹெபாடிடிஸ் பி சம்பவங்கள்! - சுகாதாரத்துறை அறிவிப்பு
- Shan Siva
- 29 Jul, 2024
புத்ராஜெயா, ஜூலை 29: 2013 முதல் 2023 வரையிலான பத்தாண்டுகளில் மலேசியாவில் 49,992 ஹெபாடிடிஸ் பி மற்றும் 34,573 ஹெபடைடிஸ் சி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்
ஹெபடைடிஸ் நோய்த்தொற்று அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் மற்றவர்களுக்கு பரவும் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பராமரிக்க சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஒரு குழந்தை ஹெபாடிடிஸ் பி தடுப்பூசியைத் தவறவிட்டால், தடுப்பூசியை மறுபரிசீலனை செய்ய பெற்றோர்கள் அருகிலுள்ள சுகாதார கிளினிக்கின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *