2026 புத்தாண்டில் சிறப்புடன் யோகம் பெறும் 4 ராசிகள்!

top-news
FREE WEBSITE AD

2026 புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு சில நாட்களே உள்ளது. 2025 வருடம் எதிர்பார்க்காத பல டிவிஸ்ட்கள் நடந்துள்ளன.இயற்கை சீற்றங்கள், தங்கம், வெள்ளி விலை உயர்வு, அரசியல் திருப்பங்கள் ஆகியவற்றை கண்டுள்ளோம்.

பலருக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடந்திருக்கும். பலருக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்திருக்காது. இதனால் 2026 புதிய வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டில் அற்புதமான பலன்களை பெற போகும் 4 ராசிகளை ஆன்மீக பகுதியில் காணலாம்.

2025 வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் 2026 புத்தாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளோம். இந்த வருடம் பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவும், பல நல்ல விஷயங்களை எதிர்பார்த்தும் அனைவரும் காத்திருக்கிறார்கள். 2026 வருடத்தின் பொது பலன்கள், எந்தெந்த துறைகளில் வளர்ச்சி எப்படி இருக்கும். இதில் அதிர்ஷ்டங்களை பெறப் போகும் ராசிகள் குறித்து இந்த ஆன்மீக பதிவில் காணலாம்.

2026 புத்தாண்டு சந்திரனில் பிறக்கிறது. கடந்த 2025 ஆம் வருடத்தை போலவே பெண்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள். மழை நன்றாக பெய்து, விவசாயம் செழிக்கும். கடக ராசியில் குரு உச்சம் பெற போகிறார். 12 ராசியில் குரு கன்னி, மீனம், கடகம் ராசிகளில் தான் அவர் பலமடைவார். அதனால் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கும்.

மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியலில் பெரும் மாற்றங்கள் இருக்கும். கூட்டணியில் சிறப்பாக செயல்படுவோர் வெற்றியை காண்பார்கள்.கடகத்தில் குரு உச்சம் பெறுகிறார். அதனால் கடக ராசி 2026 மிகவும் நன்றாக இருக்கும். கோயில் நிகழ்வுகள், கட்சி கூட்டங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏப்ரல் மாதம் பிறக்க போகும் தமிழ் வருடம் யுவ வருடம். விமானத்துறையில் சர்ச்சைகள் இருக்கும். கிழக்கத்திய தேசியங்களில் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும். இந்தமுறை சித்த வைத்தியத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், புரட்சிகள் இருக்கும்.

ராணுவ தளவாடங்கள், புதிய போர் விமானங்களில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வருடத்தில் நிறைய நல்லதுகள், கெட்டதுகள் எல்லாமே இருக்கும். 2026 ஆம் வருடத்தில் கன்னி ராசி டாப்பாக இருக்கும்.

கன்னி ராசிக்கு எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கும். ராசியில் இருந்து கேது பகவான் விலகவுள்ளார். கடகம் ராசிக்கு குரு பகவான் பலமடைவதால் அந்த ராசிக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குரு பகவான் விருச்சிகம், மகரம்,ராசிகள் மீது நேரடியாக விழுவதால் அந்த ராசிகளுக்கும் இந்த வருடம் நன்றாக இருக்கும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *