மோசமான வானிலை: செனாய் விமான நிலையத்தில் 5 விமான சேவைகள் பாதிப்பு

top-news

இஸ்கண்டர் புத்ரி, அக். 8: மோசமான வானிலை மற்றும் மிகக் குறைந்த பார்வைத்திறன் காரணமாக இன்று காலை செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் குறைந்தது 5 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், அவற்றின் நேர அட்டவணைகளிலும் தாமதம் ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையில், சில விமானங்கள் செனாய் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக, சில விமானங்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மற்றும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் நோக்கி திருப்பி விடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், செனாய் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானங்கள் மட்டுமின்றி, தங்களது தொடக்க நிலையங்களில் இருந்து இன்னும் புறப்படாத சில விமானங்களுக்கும் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக அந்தோணி லோக் கூறினார்.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *