கனடா பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி: டிரம்ப் புதிய அறிவிப்பு

top-news

அமெரிக்கா, ஜூலை 21-

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி (Tariff) விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க உள்நாட்டு தொழில்துறையை பாதுகாப்பதற்கும், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க உற்பத்தியாளர்களின் போட்டித்திறனை உயர்த்தவும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் இந்த புதிய வரி விதிப்பு உதவும் என்று கூறினார். குறிப்பாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய தொழில்துறை பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு இந்த 50 சதவீத வரி அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு கனடா அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இது பாதிக்கும் என்றும், உலக வர்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கனடா அதிகாரிகள் கூறியுள்ளனர். வர்த்தக பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *