ஆபாச ஓட்டம்! வெளிநாட்டினருக்கு RM 5000 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், அக் 7: ஜொகூர் கோத்தா திங்கியில் நடைபெற்ற நீண்ட தூரத் ஓட்டத்தில் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக சர்ச்சையானதை அடுத்து, சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் குற்றத்தை ஒப்புகொண்டனர். இந்நிலையில் அந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தலா 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

தைவான் நாட்டுக்காரரான 66 சயது ஆர்தர் வாங், மற்றும் இந்திய நாட்டவரான 70 வயது சதநாராயண பிரசாத் பாபோலி இருவரும், கோத்தா திங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விதித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை, பெங்கராங்கில் உள்ள டேசாருவில் ஆத்திரமூட்டும் வகையில் ஆடை அணிந்து ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 பெங்கராங்கில் உள்ள லோட்டஸ் தேசாரு ஹோட்டலில் அதே தேதி மற்றும் நேரத்தில் அதே செயலைச் செய்ததாக சதநாராயணா மீது குற்றம் சாட்டப்பட்டது.

 தண்டனைச் சட்டத்தின் 294(a) பிரிவின் கீழ் அவர்களது குற்றச்சாட்டுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் மலேசியாவின் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கவும் கண்ணியமாக உடை அணியவும் ஒரு பாடமாக இருவருக்குமே கடும் தண்டனை விதிக்குமாறு மாஜிஸ்திரேட் நூர்கலிதா ஃபர்ஹானா அபு பக்கரிடம் துணை அரசு வழக்கறிஞர் அப்துல் கபார் அப் லத்தீப் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *