ஜொகூரில் 5,000 ஸ்மார்ட் CCTV கேமராக்கள்! ஜொகூர் அரசு தீவிரம்
- Shan Siva
- 13 Aug, 2026
ஜொகூர் பாரு, ஆக 13: மாநிலப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிரேட்டர் ஜொகூர் பாரு பகுதி முழுவதும் சுமார் 5,000 CCTV ஸ்மார்ட் கேமராக்களை ஜொகூர் அரசு நிறுவ உள்ளது.
கூடுதல் ஸ்மார்ட் சிசிடிவி
கேமராக்களை நிறுவுவது, பாதுகாப்பை
மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று மாநில வீட்டுவசதி
மற்றும் உள்ளாட்சி மன்றக் குழுவின் தலைவர் டத்தோ முகமது ஜஃப்னி முகமது ஷுகோர்
கூறினார்.
இந்த இலக்கானது, கிரேட்டர் ஜேபி பிராந்தியத்தின் கீழ் உள்ள உள்ளாட்சி
அமைப்புகளான ஜொகூர் பாரு மாநகர சபை (MBJB), பாசிர் கூடாங் மாநகர சபை (MBPG), இஸ்கண்டர்
புத்ரி மாநகர சபை (MBIP) மற்றும் கூலாய்
நகராட்சி மன்றம் (MPKu) ஆகியவற்றை
உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.
அதிக ஸ்மார்ட் சிசிடிவி
கேமராக்கள் நிறுவப்படுவதால், நகரவாசிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக
உணர்வார்கள், இதன் மூலம் பொது நலன்
மேம்படும் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
நெரிசலைக் குறைப்பதற்காக, அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில், குறிப்பாக நகர மற்றும் நகர மையங்களில், மாநில அரசு மேலும் பல ஸ்மார்ட் போக்குவரத்து விளக்குகளை நிறுவும் என்று ஜஃப்னி கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



