கார் மின்கம்பத்தில் மோதியதில் 51 வயது நபர் பலி!

top-news
FREE WEBSITE AD

பத்து பஹாட், ஜூலை 22: பத்து பஹாட், ஜலான் முகமட் அகில் என்ற இடத்தில் கார் மின்கம்பத்தில் மோதியதில் 51 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 7.30 மணியளவில் ஜாலான் பகாவ்  சோண்டோங்கில் இருந்து ஜாலான் சியாபண்டார் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பத்து பஹாட் செயல் அதிகாரி ஷாருல் அனுவார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

பாதிக்கப்பட்டவர் சுங் வூன் கிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்; கடுமையான உள் காயங்கள் காரணமாக அந்நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார், என்று ஷாருல் அனுவார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *